அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 

 

கோழிப்பண்ணையம் என்றால் என்ன?

கோழிப்பண்ணையம் என்பது பண்ணைக்கோழிகளை உணவுத்தேவைக்காக வளர்ப்பதும், அதன் மூலம் கூடுதல் வருமானம் பெறுவதும் ஆகும்.

கோழிப்பண்ணையத்தின் முக்கியத்துவம் என்ன ?

குறைந்த முதலீட்டுடன், முதலீடு மீதான லாப விகிதமும் அதிகம் இருக்கும் தொழில் இது. கோழிப்பண்ணை என்பது உணவுத்தேவையை பூர்த்தி செய்வதிலும், வருமானம் தருவதிலும் நம்பகத்தன்மை உள்ள ஒரு தொழில் துறை. இத்தொழில்துறை பெருமளவு இளைஞர்களை தொழில் முனைவோராக ஆக்கியுள்ளது.

கோழிப்பண்ணை மேலாண்மை என்பதற்கு பொருள் என்ன?

பண்ணையிலுள்ள பறவைகள் மகிழ்வுடனும், நல்ல உற்பத்தித் திறனுடனும் விளங்க போதுமான அளவு தீவனம், நீர், தங்குமிடம், மருத்துவ கண்காணிப்பு ஆகிய வசதிகள் வழங்கப்படுவது மிக அவசியமானவை. கோழிகள் குஞ்சு பொரிப்பிலிருந்து துவங்கி வளர்க்கப்பட்டு, உணவாகும் வரை, அதாவது, “பண்ணையிலிருந்து உணவுமேஜைக்கு” வரும்வரையிலான ஒட்டுமொத்த செயல்பாடுகளே கோழிப்பண்ணை மேலாண்மை எனப்படுகிறது.

கறிக்கோழி என்பது என்ன?

கோழிப்பண்ணையில் இறைச்சித் தேவைக்காக வளர்க்கப்படும் கோழிகளையே கறிக்கோழிகள் என்கிறோம்

முட்டைக்கோழி என்பது என்ன?

கோழிப்பண்ணையில் முட்டைத் தேவைக்காக வளர்க்கப்படும் கோழிகளையே முட்டைக்கோழிகள் என்கிறோம்

ஒரு நுகர்வோர் என்ற முறையில், கோழிக்கு கொடுக்கப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகள் குறித்து நான் கவலைப்பட வேண்டுமா?

மனிதர்களைப் போலவே கோழிகளும் நோய்வாய்ப்படுவதுண்டு. கோழிகளின் நலனுக்காக நோய்க்கிருமி எதிர்ப்பு மருந்து பொதுவான முறையில் பயன்படுத்தப்படுகிறது. கோழிப்பண்ணையாளர்கள் மருத்துவ நல வல்லுனர்களுடன் இணைந்து கோழிகள் ஆரோக்யமானதாக இருப்பதையும், இறைச்சி பாதுகாப்பானதாக, முழுமையானதாக இருப்பதையும் உறுதி செய்கிறார்கள்.
கால்நடை மருத்துவர்கள், கோழிப்பண்ணைவிவசாயிகள் இணைந்து புதிய முறைகளை கண்டறிவதன் மூலம் கோழிகளின் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்கிறார்கள்.இதனால் நுகர்வோருக்கு பொருட்களை, சேவைகளை வழங்குவதில் பற்பல வகைப்பாடுகளை அளிக்க முடிகிறது.

கோழிகளுக்கு ஹார்மோன் தூண்டல் (சுரப்பு திரவம்) செயற்கையாக உட்செலுத்தப்படுகிறதா ?

இத்தகைய செயற்கை ஹார்மோன்களின் விலையை அந்தக் கோழியின் விலையுடன் ஒப்பிட்டால் கோழியின் விலையை விட ஹார்மோனின் விலை மிக அதிகம். இப்படி செய்து கோழியின் அடக்க விலையை அதிகரித்துக்கொள்வதால் பண்ணை விவசாயிக்கு எவ்வகையில் லாபம் வரப்போகிறது?

இரட்டைப் பயனுள்ள கோழிகள் என்பவை யாவை?

முட்டையிடுதல் மற்றும் இறைச்சி ஆகிய இரு பயன்பாடுகளையும் அளிக்கும் கோழிகளே இரட்டைப் பயனுள்ள கோழிகள் எனப்படுகின்றன.

முட்டையிடும் கோழிகளுக்கு எத்தனை மணிநேரம் வெளிச்சம் தேவைப்படும்?

பொதுவாக 14-16 மணிநேரம் வரை கோழிகளுக்கு முட்டையிட வெளிச்சம் இருக்க வேண்டும். சிறப்பான முட்டை உற்பத்திக்கு போதுமான அளவு வெளிச்ச வசதிகள் செய்யப்பட வேண்டியது அவசியம்.

பண்ணைக்கோழிகள் நடமாடத் தேவையான இடவசதி இருக்கிறதா?

கோழிகள் உண்ண, நீரருந்த, ஓய்வெடுக்க, சுற்றித்திரிய வசதியான இட அமைப்போடுதான் கோழிப்பண்ணைகள் கட்டப்படுகின்றன. ஒரு கோழி குஞ்சிலிருந்து பெரிதாகும்வரை அதன் வளர்ச்சிக்கு தேவைப்படும் இடவசதி போதுமான அளவில் உண்டு.
முதுமொழி ஒன்றுண்டு – ஒரேபோல் சிறகுள்ள பறவைகள் ஒன்றுகூடி மந்தையெனத் திரியும். சில நேரங்களில் அவற்றின் மந்தை செயல்பாட்டைப் பார்க்க அவை ஒன்றுடன் ஒன்று நெருக்கியடித்துக்கொண்டு இருப்பது போல தோன்றலாம்.இவ்வாறு மந்தையாய் திரிவது அவற்றின் இயல்பாக அமைந்த குணாம்சத்தால் தானே தவிர இடநெருக்கடியால் அல்ல.

சுதந்திரமாக வளர்க்கப்படும் கோழிகள் என்பது என்ன?

கூண்டுகள் இல்லாமல் கோழிகள் திறந்தவெளிகளில், எல்லா பருவ சூழலிலும் பெரும்பாலானா நேரமும் திரியும்படி வளர்ப்பதே சுதந்திரமாக வளர்க்கப்படும் கோழிகள் எனப்படும்.
பெரும்பாலும் இம்முறையில் வேலிகள் இருப்பதில்லை. அதாவது பரந்த வெளியைச் சுற்றி தொலைவாக வேலிகள் அமைந்திருக்கும். இம்முறையில் வளரும் கோழிகளுக்கு தீவனமும், நீரும் வெளியிலேயே இருக்குமாறு அமைக்கப்பட்டிருக்கும். இதனால் (வலுக்கட்டாயமாக) கோழிகள் வெளியிலேயே வெகுநேரம் இருக்குமாறு செய்யப்படுகிறது. இதனால் கூண்டுகள் சுத்தமாகவும், உலர்வாகவும் இருக்கும்.

கறிக்கோழிகளை வளர்ப்பதானால், அவை உணவுக்காக அறுக்கப்படுவதற்கு எவ்வளவு நாட்கள் வளர வேண்டும்?

பொதுவாக கறிக்கோழிகள் 8 முதல் 12 வாரங்களில் உணவுத்தேவைக்காக அறுக்கப்படுகின்றன. இந்தப் பருவத்தில்தான் கோழியின் இறைச்சி புதுச்சுவையுடன், மென்மையான பதத்துடன் இருக்கும்.

வழக்கமான தீவனம் தவிர கோழிகளுக்கு வேறென்ன உணவு வகைகளைக் கொடுக்கலாம்?

விதைகள், புல்,தானியங்கள், காய்கறிகள், பூக்கள், பூச்சி புழுக்கள், கோதுமை,கம்பு, ஓட்ஸ், பார்லி, சோளம் போன்றவையும் வழக்கமான தீவனம் தவிர கோழிகளுக்கு உணவாக ஆகும்.

பண்ணைக்கோழிகளுக்கு பொதுவாக வரும் நோய்கள் என்ன?

பண்ணைக்கோழிகளுக்கு பொதுவாக வரும் நோய்களை நான்கு விதங்களில் பிரிக்கலாம்.
• நடத்தைகளால் வரும் நோய்கள்
• தொற்று நோய்கள்
• ஊட்டச்சத்து குறைபாடு நோய்கள்
• ஒட்டுண்ணி நோய்கள்

பண்ணைக்கோழிகளுக்கான நோய்த்தடுப்பு முறைகள் என்னென்ன?

பண்ணைக்கோழிகளுக்கான பொதுவான நோய்த்தடுப்பு முறைகளை பின்வருமாறு பின்பற்றலாம்.
• கோழிக்கூண்டுகளை சீரான இடைவெளியில் சுத்தம் செய்தல்
• பழைய குப்பைகளை குறிப்பிட்ட இடைவெளியில் அகற்றி தூய்மை செய்தல்
• பிற வெளிப்பறவைகளை பண்ணைக்குள் அனுமதிக்காமல் இருத்தல்
• புதிய கோழிகளை ஏற்கனவே இருப்பவற்றுடன் சேர்க்கையில் மிகக் கவனத்துடன் இருத்தல்
• பண்ணைக்கு பார்வையாளர்கள் வருகை தரும்போது கூடுதல் கவனத்துடன் இருத்தல்
• சரியான முறையிலும், தகுந்த கால அளவிலும் கோழிகளுக்கு தடுப்பு மருந்து அளித்தல்
• தரமான தீவனமும், சுத்தமான குடிநீரும் கோழிகளுக்கு அளித்தல்
• ஒவ்வொரு கோழிக்கும் போதுமான இடவசதி இருக்குமாறு செய்தல்
• வளர்ப்பு விலங்குகளை பண்ணைக்கு அருகில் இல்லாமல் பார்த்துக் கொள்ளல்
• பாதிக்கப்பட்ட கோழிகளை தனிமைப்படுத்த தனியிடவசதி ஏற்படுத்துதல்
• பாதிக்கப்பட்ட அல்லது இறந்த கோழிகளை தாமதிக்காமல் உடனடியாக மந்தையிலிருந்து அகற்றுதல்

Stay updated

Get Our Latest Articles Delivered In your inbox