இந்திய கோழிபண்ணைத் தொழில் குறித்து …

இந்திய கோழிபண்ணைத் தொழில் குறித்து ...

உலக அளவில் பண்ணைக்கோழிகள், கோழி முட்டைகளை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. புள்ளிவிவரங்களின் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு இந்தியா கோழிப்பண்ணைத் தொழிலின் மதிப்பு 204900 கோடி.

இந்திய கோழிபண்ணைத் தொழில் குறித்து …

உலக அளவில் பண்ணைக்கோழிகள், கோழி முட்டைகளை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. புள்ளிவிவரங்களின் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு இந்தியா கோழிப்பண்ணைத் தொழிலின் மதிப்பு 204900 கோடி. IMARC குழுமத் தகவல் அடிப்படையில் 2020-2025 ஆம் ஆண்டுகளில் கோழிப்பண்ணைத்தொழிலின் வளர்ச்சி அபரிமிதமான ஒன்றாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய கோழிப்பண்ணைத்தொழில் முறைப்படுத்தப்பட்ட தொழில் மற்றும் முறைசாரா தொழில் என இரு வகைகளில் இயங்குகிறது முறைப்படுத்தப்பட்ட கோழிப்பண்ணைத்தொழில் 80% மும், முறை சாரா கோழிப்பண்ணைத்தொழில் 20% மும் சந்தையில் இயங்குகின்றன. முறை சாரா கோழிப்பண்ணைத்தொழில் பெரும்பாலும் வீட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபடும் குறைந்த வருவாய் பிரிவினரால் வருவாய் ஈட்டும் மற்றும் உணவுப் பயன்பாட்டு நோக்கில் நடத்தப்படுகிறது. கடந்த இருபதாண்டுகளில் இத்தொழில் பெரும் மாறுதல்களைச் சந்தித்திருக்கிறது. வீட்டில் புழக்கடைப் பக்கமாக செய்யப்பட ஒரு செயல் இன்று பெரும் எண்ணிக்கையில் பல பிரிவினரையும் ஒன்றிணைக்கும் ஒரு பெருந்தொழிலாக மாறியிருக்கிறது. இனப்பெருக்கம், குஞ்சு பொரிப்பு, வளர்ப்பு, முறைப்படுத்துதல் என இத்துறை இன்று குறிப்பிடத்தக்க அளவில் முதலீடுகளை ஈர்த்துள்ளது .

இந்திய கோழிபண்ணைத் தொழில் குறித்து ...

கோழிப்பண்ணைப் பொருட்கள் சந்தைக்கான தூண்டுகோல்கள்

Z

கூடுதல் வருமானம்

தனிநபர் வருமானம் அதிகரித்து வருவது மற்றும் மத்திய தர குடும்பங்களின் பயன்பாடு ஆகியவை இத்துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி தேவையை அதிகரிக்கச் செய்திருக்கின்றன.

Z

மாறி வரும் உணவுப்பழக்கம்

உலகின் மிகப்பெரிய சைவ உணவுப்பழக்கமுள்ள நாடுகளில் ஒன்றான இந்தியாவில் தற்போது அசைவ உணவுப்பழக்கம் அதிகரித்து வருகிறது. கூடுதலாக, வெவ்வேறு உலக உணவுகளை உண்பதிலும் ஆர்வம் அதிகரித்து வருவதும் முக்கிய காரணமாகும்.

Z

வாய்ப்புகள் நிறைந்த புதிய சந்தை

வளர்ந்து விரும் நாடு என்பதால் வழக்கமான அசைவ உணவு சந்தைகளுக்குள் நுழைவதும் அவற்றைக் கையாள்வதும் சவாலான செயல். ஆகவே கோழிப்பண்ணைத் தொழிலில் ஒருங்கிணைக்கப்பட்ட உற்பத்தி நுட்பங்களை குறைந்த செலவேறிய முறையில் செயல்படுத்தி பரவலாகக் கிடைக்கச் செய்வதன் மூலம் இத்துறையில் ஒரு பெரிய ஊக்கத்தை ஏற்படுத்த முடியும்.

Z

உணவு சேவைகள் சந்தையின் விரிவாக்கம்

நாடு முழுவதும் மிக வேகமாகப் பெருகி வரும் உணவகங்களும், துரித உணவு தொடர் கடைகளும் கோழிப்பண்ணைத்தொழிலின் தேவையை பெரிதும் மாற்றியமைத்துள்ளன. முட்டையும், கூழி இறைச்சியும் உணவுச் சேவைத் துறையின் அடிப்படை மூலப்பொருளாக மாறியுள்ளன.

Z

பேக்கரி வகை உணவுச் சந்தையின் வளர்ச்சி

பேக்கரி வகை உணவுகளுக்கான தேவை இன்றைய நாட்களில் மிகவும் அதிகரித்திருத்து வருவதால் அதை ஒட்டி முட்டைகளுக்கான தேவையும் பெருமளவில் அதிகரித்திருக்கிறது

Z

உற்பத்தித் திறன்சார் செயல்பாடுகளில் முன்னேற்றம்

கோழிப்பண்ணைத் தொழில் சார் தொழிற்கூடங்களில் பெருமளவு தொழிநுட்ப வளர்ச்சி வந்து விட்டது. முட்டைப் பொடி தயாரிப்பு, உறை நிலை முட்டைக்கரு, உரிக்கப்பட்ட கோழி, கோழி இறைச்சி துண்டுகளாக்கல் போன்ற கோழிப்பண்ணை சார் செயல்பாடுகளில் தொழில்நுட்பம் சிறப்பாக பங்காற்றுகிறது.

இவை அனைத்துமே இந்திய கோழிப்பண்ணைத் தொழிலில் ஏற்பட்டுள்ள வேகமான வளர்ச்சிப்பாதையின் உறுதியான சான்றுகளாகும்
.

தமிழ்நாடு

மாநிலத்தில் கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி ஆகியவை கிராமப்புற மக்கள்தொகைக்கு முக்கியமான பொருளாதார பங்களிப்பை அளிக்கின்றன. 60% க்கும் அதிகமான கிராமப்புற மக்கள்தொகைக்கு ஆதரவாக இருப்பதோடு மட்டுமன்றி இவை அவர்களது ஊட்டச்சத்து தேவையை நிறைவேற்றுவதிலும் பங்களிக்கின்றன. மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (State GDP) 45.62% வேளாண்மை மற்றும் அதன் துணைத் தொழில்களிலிருந்து பங்களிப்படுவது; இதில் கால்நடை வளர்ப்புத் துறை 5.47% பங்களிக்கிறது. இதில் கால்நடை வளர்ப்புத் துறை 5.47% பங்களிக்கிறது.. கிராமப்புற மேம்பாட்டில் கால்நடைகள் வளர்ப்பு முக்கியப் பங்காற்றுகிறது. தமிழகத்தில் கோழி வளர்ப்பு அதிகளவில் செய்யப்படும் ஒரு பகுதிநேரத் தொழிலாகும். நாமக்கல், சேலம், ஈரோடு,, கோயம்புத்தூர் ஆகிய தமிழக மாவட்டங்கள் பண்ணைக்கோழி வளர்ப்புத் தொழிலில் முக்கிய மையங்களாகச் செயல்பட்டு வரும் மாவட்டங்களாகும்.

கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி க்கான மத்திய அமைச்சகத்தின் கால்நடைத் தொகைக் கணக்கெடுப்பின்படி 12 கோடிக்கும் அதிகமான கால்நடைகள் எண்ணிக்கையுடன் இந்தியாவிலேயே தமிழகத்தின் பண்ணைக்கோழி உற்பத்திதான் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகம் ஒரு நாளைக்கு 3.75 கோடி முட்டைகளை உற்பத்தி செய்கிறது. இதில் 3,2 கோடி முட்டைகள் தமிழகம்,கேரளா ஆகிய இருமாநிலங்களிலேயே விற்பனையாகின்றன. 35 லட்சம் முட்டைகள் தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களின் மதிய உணவிற்கு அளிக்கப்படுகிறது. முட்டையினால் கிடைக்கும் ஆரோக்கியமான பலன்களை மக்கள் அறிந்து கொண்டதால் முட்டைக்கான தேவை அதிகரிக்கிறது. தேசிய அளவில் ஒருவரது தனிநபர் முட்டை நுகர்வு ஆண்டு ஒன்றுக்கு 80 எனும் அளவில் இருப்பது தமிழகத்தில் ஆண்டு ஒன்றுக்கு தனிநபர் நுகர்வு 100 முட்டைகளாக இருக்கிறது. 11 முதல் 12 லட்சம் எண்ணிக்கையில் நாளொன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் கறிக்கோழிகளில் 40% வரை கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது.

Stay updated

Get Our Latest Articles Delivered In your inbox

Reach Us

Please get in touch and we will be happy to help you.

PFRC
S.F.NO 388/3, Ist Floor, Federal (Upstairs),
Chettipalayam Road,
Palladam - 641664,
Tirupur District, Tamilnadu, India.

04255-254877
04255-255371

info@pfrc.in

Leave A Message