எங்களைக் குறித்து

எங்களைக் குறித்து ...

கோழிப்பண்ணை விவசாயிகள் ஒழுங்குமுறைக் குழுமம் / கமிட்டி. கோழிப்பண்ணையம், குஞ்சு பொரிப்பு, தொடர்பான நடவடிக்கைகள், வழங்கல் வழிமுறைகள், தீவனத்தயாரிப்பு, கோழி மற்றும் கோழிப்பண்ணைப் பொருட்களுக்கான சில்லறை வாணிப வழிமுறைகள், கோழிப்பண்ணை தொடர்பான பிற பிரிவுகள் ஆகியவற்றில் இயங்கி வருவோர் சார்பில் செயல்படும் சுய ஒழுங்குமுறை அமைப்பாகும்.

 

உருவாக்கம்

உருவாக்கம்

இது கோழிப்பண்ணை விவசாயிகள் மற்றும் கோழி வளர்ப்போருக்கான உயர்நிலை அமைப்பு சுய ஒழுங்குமுறை அமைப்பு. கோயம்புத்தூர், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் கோழிப்பண்ணையம், குஞ்சு பொரிப்பு, தொடர்பான நடவடிக்கைகள், வழங்கல் வழிமுறைகள், தீவனத்தயாரிப்பு, கோழி மற்றும் கோழிப்பண்ணைப் பொருட்களுக்கான சில்லறை வாணிப வழிமுறைகள், கோழிப்பண்ணை தொடர்பான பிற பிரிவுகள் ஆகியவற்றில் இயங்கி வருவோர் சார்பில் செயல்படும் சுய ஒழுங்குமுறை அமைப்பாகும்.

கோயம்புத்தூர், அதன் சுற்றுப்பகுதிகளில் கோழிப்பண்ணை மற்றும் கோழிக்குஞ்சு வளர்ப்புத் தொழிலின் மேம்பாட்டை ஊக்கப்படுத்தவும் , உயர்ந்த பட்ச தரச்செயல்பாடுகள் மூலம் சுய ஒழுங்குமுறையை கடைப்பிடிப்பதும், கோழிப்பண்ணை தொடர்பான தொழிற்பிரிவுகளில் ஈடுபட்டிருக்கும் அனைவரின் நலனைப் பாதுகாத்து, மேம்படுத்தும் அமைப்பு என்ற விதத்திலும் ஒரு முன்னோடித் தளமாக செயல்படும் PFRC 2020 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.

கோழிப்பண்ணைத் தொழிற்பிரிவுகள் அனைத்திலும் உள்ள பங்கேற்பாளர்கள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும், ஒருவருக்கொருவர் உரையாடவுமான ஒரு பொதுத் தளத்தை உருவாக்கி அளிப்பதே PFRC யின் அடிப்படைக் குறிக்கோள். கோழிப்பண்ணையம், குஞ்சு பொரிப்பு, தொடர்பான நடவடிக்கைகள், வழங்கல் வழிமுறைகள், தீவனத்தயாரிப்பு, கோழி மற்றும் கோழிப்பண்ணைப் பொருட்களுக்கான சில்லறை வாணிப வழிமுறைகள், கோழிப்பண்ணை தொடர்பான பிற பிரிவுகள் ஆகியவற்றில் இயங்கி வருவோர் ஆகியோரின் நலனைப் பாதுகாத்தல்,;

எங்களது தொலைநோக்கு

எங்களது தொலைநோக்கு

உள்நாட்டு,வெளிநாட்டு சந்தைகளில் கோழிப்பண்ணை தொடர்பான புதிய போக்குகள், சந்தை நிலவரங்கள், சவால்கள் ஆகியவற்றை அறியச் செய்தல்; உச்சபட்ச தரச்செயல்பாடுகள் மூலம் கோழிப்பண்ணைத் தொழிலின் செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் வெவ்வேறு பிரிவுகளிலும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் செயல்பாட்டாளர்களுக்கு நடுவே முக்கியமானவற்றை உரையாடிக்கொள்ளும் வசதிகளை அளித்தல் ஆகியவை முக்கிய நோக்கங்களாகும்.

எங்களது செயல் இலக்கு

எங்களது செயல் இலக்கு

கோழிப்பண்ணைத் தொழிலின் வெவ்வேறு பிரிவுகளிலும் இயங்கிவருவோருக்கு இடையே தொடர்பு கொள்ளவும், ஒருவருக்கொருவர் உரையாடிக்கொள்ளவுமான மையப்புள்ளியாக இருப்பதன் மூலம் இத்தொழிலின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை இலக்காக ஆக்குதல்; இதன் வழியே நுகர்வோருக்கு உயர்தரத்திலான செயல்திறன், வரையறைகள் மற்றும் தரக்கட்டுப்பாடுகள் மூலம் கோழிப்பண்ணைப் பொருட்களை தேசிய அளவிலான , உலகத்தரத்தில் அளிப்பதை மையக் குறிக்கோளாகக் கொண்டு இயங்குதல்

முக்கிய மதிப்புகள்

எங்களது விழுமியங்கள்

ஒருமித்த செயல்பாடுகள் மற்றும் கூட்டுப்பணிகள் மூலம் கோழிப்பண்ணைத் தொழிலில் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு ஆகியவற்றை உருவாக்குவதில் முன்னணி அமைப்பாகச் செயல்படுதல்; உயர்தரத்திலான செயல்திறன் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றை பின்பற்றுவதன் வழியே இத்தொழிலின் அனைத்துப் பிரிவு பங்கேற்பாளர்களின் நலனை உறுதி செய்து அதன் வழியே இறுதி நுகர்வோருக்கு தரமான கோழிப்பண்ணைப் பொருட்களை அளிப்பதை மைய இலக்காகக் கொண்டு இயங்குதல்

PFRC -யுடன் இணைந்து கொள்ளுங்கள்

எங்களுடன் இணைந்து உறுப்பினராவதன் மூலம் கோழிப்பண்ணை தொடர்பான நவீனப் போக்குகள், வாய்ப்புகள், சவால்கள், துறையில் உருவாகி வரும் தொழில்நுட்ப மாற்றங்கள் ஆகியவை தொடர்பான தகவல்களைக் கையாளும் வசதி, கோழிப்பண்ணையின் அனைத்து பிரிவினைச் சேர்ந்தவர்களுடன் உரையாடும் வாய்ப்பு, அரசாங்கம் மற்றும் கோழிப்பண்ணைத் தொழிலுடன் தொடர்புடைய பிற துறைகளுடன் கோழிப்பண்ணைத் தொழில் சார்பில் பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பு முதலியவை கிடைக்கும்.

எங்கள் நிர்வாக சபை

ஆர்.லட்சுமணன்

ஆர்.லட்சுமணன்

தலைவர். PFRC
சாந்தி ஃபீட்ஸ் பிரைவேட் லிமிடெட் .

டாக்டர் பி . செல்வராஜ்

டாக்டர் பி . செல்வராஜ்

துணைத் தலைவர், பி.எஃப்.ஆர்.சி.
செல்வம் பிராய்லர்ஸ் பிரைவேட் லிமிடெட், நாமக்கல்.

கே.சின்னசாமி (கண்ணன்)

கே.சின்னசாமி (கண்ணன்)

செயலாளர், பி.எஃப்.ஆர்.சி.
சுவாதி ஹேட்சரீஸ், பல்லடம்.

திரு.ஆர். லட்சமணன்

ஆர்.லட்சுமணன்

தலைவர். பி.எஃப்.ஆர்.சி.
சாந்தி ஃபீட்ஸ் பிரைவேட் லிமிடெட்.

டாக்டர் பி.செல்வராஜ்-துணைத் தலைவர்

டாக்டர் பி . செல்வராஜ்

துணைத் தலைவர், பி.எஃப்.ஆர்.சி.
செல்வம் பிராய்லர்ஸ் பிரைவேட் லிமிடெட், நாமக்கல்.

கே.சின்னசாமி (கண்ணன்)

கே.சின்னசாமி (கண்ணன்)

செயலாளர், பி.எஃப்.ஆர்.சி.
சுவாதி ஹேட்சரீஸ், பல்லடம்.

தற்போதைய தகவல்களை அறிந்திருங்கள்

உங்கள் மின்னஞ்சல் பெட்டிக்கு எங்களது சமீபத்திய கட்டுரைகளை கிடைக்கச் செய்திடுங்கள்

Reach Us

Please get in touch and we will be happy to help you.

PFRC
S.F.NO 388/3, Ist Floor, Federal (Upstairs),
Chettipalayam Road,
Palladam - 641664,
Tirupur District, Tamilnadu, India.

04255-254877
04255-255371

info@pfrc.in

Leave A Message