ஒழுங்குமுறைகள்

ஒழுங்குமுறைகள்

வணிக ரீதியிலான கோழிப்பண்ணை வைத்திருக்க அரசாங்கத்திடமிருந்து உரிமமும், அனுமதியும் பெறவேண்டியது அவசியம்.

கோழிப்பண்ணையம்

வணிக ரீதியிலான கோழிப்பண்ணை வைத்திருக்க அரசாங்கத்திடமிருந்து உரிமமும், அனுமதியும் பெறவேண்டியது அவசியம். பின்வரும் அடுக்கு முறையிலான செயல்பாடுகளைப் பின்பற்றுவது வெற்றிகரமான கோழிப்பண்ணையை நிறுவ உதவும்:

 • • பொருத்தமான கோழிப்பண்ணைத் தொழிற்பிரிவை தேர்ந்தெடுக்கவும் ( கோழிகள் இனப்பெருக்கம், முட்டைக்கோழிகள் இனப்பெருக்கம், கறிக்கோழிகள் இனப்பெருக்கம் போன்றவை)
 • • பண்ணை அமைப்பதற்குத் தகுந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தல்
 • • பண்ணையில் வளப்பதற்குப் பொருத்தமான கோழி வகையைத் தேர்வு செய்தல் (கறிக்கோழி , முட்டைக்கோழி, இன்ன பிற)
 • • கோழிக்கூண்டுகளையும், நீர், தீவனம், மருந்துகள்,பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றைப் பாதுகாத்து வைக்கும் அறைகளையும் உருவாக்குதல்
 • • சரியான நோய்த்தடுப்பு முறைகளை முறைகளை உருவாக்கி நிர்வகித்தல்
கோழிப்பண்ணையம்
பியூரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் (BIS) – Logo
[wpdatatable id="5"]

ஒரு கோழிப்பண்ணையைத் துவக்கும் உரிமம் பெற பின்வரும் விஷயங்களைப் பின்பற்ற வேண்டும்

உரிமத்திற்கான விண்ணப்பத்தை அளித்தல்

உரிமத்திற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்தல்

விண்ணப்பதாரர் கீழ்க்கண்ட விவரங்களை விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும் .

 • • பண்ணையின் நீளம், அகலம், பரப்பளவு, அமைப்பு ஆகியவற்றைக் குறிக்கும் சரியான அளவீட்டு வரைபடம்
 • • காற்றோட்டம், வெப்பநிலை கட்டுப்பாடு, பண்ணையின் செயல்திறன்கள் ஆகியவை குறித்த விரிவான தகவல்கள்
 • • விண்ணப்பத்தோடு இணைக்கப்படவேண்டிய தரவுகளின் பட்டியல் – கம்பெனி பதிவு செய்யப்பட்டதற்கான பதிவுச்சான்று, காப்பீட்டு பாலிசி, கோழிப்பண்ணைத் தொழில் பெர்மிட், தொழில் திட்டம், விலங்கு நல வாரிய நெறிமுறைகள் போன்றவை
 • • உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து பெற வேண்டிய பிற உரிமங்கள் – பண்ணை அமையவிருக்கும் இடத்திலுள்ள உள்ளாட்சி அமைப்பிடமிருந்து தடையில்லா சான்று, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து தடையில்லாச் சான்று, மின்சாரத் துறையிடமிருந்து தடையில்லாச் சான்று, குடிநீர் வாரியத்திடமிருந்து நீருக்கான அனுமதி

பண்ணையின் பரப்பும், அமைப்பும்

 • • நன்கு வரையறுக்கப்பட்ட எல்லைகளோடு பண்ணை பாதுகாப்பாக இருப்பதை விண்ணப்பதாரர் உறுதி செய்ய வேன்டும்
 • • பிற பண்ணைகளிலிருந்து 100 மீ இடைவெளியிலும், கிராமத்திலிருந்து 500 மீ இடைவெளியிலும், சாலையிலிருந்து 200 மீ இடைவெளியிலும் பண்ணை அமைந்திருக்க வேண்டும்
கோழி பண்ணை வீடு
கோழி தீவனம்

நீர், தீவனம், பூச்சிக்கொல்லிகள், மருந்துகள் ஆகியவற்றுக்கான இட வசதி

 • • தொற்றுகளிலிருந்து பண்ணையைப் பாதுகாக்கும் விதத்தில் சுத்தமான நீருடன் கூடிய நீர் வசதி போதுமான அளவில் இருக்க வேண்டும்
 • • தீவன இருப்புக்கான கலன்கள் வைக்கப்பட சுத்தமான இடவசதி இருக்க வேண்டும்
 • • தகுந்த சமயங்களில் தக்க அளவில் மருந்தளிக்கும் வசதி இருக்க வேண்டும்
 • • மருந்துகளும், பூச்சிக்கொல்லிகளும் தனியே பாதுகாத்து வைக்கப்படும் வசதி இருக்க வேண்டும்

சுகாதாரமான, பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்தல்

 • • இறந்த கோழிகளின் உடலை ஒவ்வொரு நாளும் அகற்றி கழிவுக் குழியில் சேர்க்கும் வசதியை உருவாக்கி வைத்தல் வேண்டும்

 • • பொருத்தமான தீ அணைப்புக் கருவிகளை சரியான இடங்களில் பொருத்தி அவற்றைப் பராமரித்து, அதன் பயன்பாடுகளை செயல்முறைகளை அறிந்து வைத்திருத்தல்

Poultry Farm Hygiene-Transparent

கோழிப்பண்ணை கையேட்டினை தரவிறக்கம் செய்ய – A Reference Guide for Central and State Poultry Farms by Department of Animal Husbandry, Dairying and Fisheries, Government of India

Z

உணவுப் பாதுகாப்பு

உயர்ந்த பட்ச தொழில்முறை தரநிர்ணயங்களை தக்கவைத்துக்கொள்ள சரியான முறையில் உணவுப் பாதுகாப்பு முறைமைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். உணவுப் பாதுகாப்பு & தர நிர்ணய நெறிமுறைகளுக்கான நெறிமுறைகள் (உரிமம்& பதிவு மற்றும் உணவுத் தொழில்),2011 சட்டத்தின் அடிப்படையில் உணவுப் பாதுகாப்புக்கான மேலாண்மை முறை குறித்த பொது வழிகாட்டல் தயாரிக்கப்பட்டுள்ளது. இது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், அது தொடர்பான ஆபத்துகளைக் கட்டுப்படுத்துதல், கோழிப்பண்ணை செயலாக்கங்கள்-சில்லறை வணிகம்-வழங்கல் -மற்றும் சேமித்துப் பாதுகாத்தல் ஆகியவை தொடர்பான புரிதல்களைத் தரும்.

Z

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

Commercial Poultry Farm businesses must follow the guidelines given by the Tamilnadu Pollution Control Board to address the environmental problems from poultry farms.

Z

விலங்குகள் நலம்

பண்ணைக்கோழிகள் மற்றும் முட்டைக்கோழிகளின் நலனை உறுதி செய்யும் விதத்தில் கீழ்க்கண்ட இரு சட்டங்களை சட்டக் கமிஷன் பரிந்துரைக்கிறது – விலங்குகள் மீதான வன்கொடுமை (முட்டைக்கோழிகள்) தடுப்புச் சட்டம் – 2012மற்றும் விலங்குகள் மீதான வன்கொடுமை (கறிக்கோழிகள்) தடுப்புச் சட்டம் – 2017

Z

ஆரோக்யம் மற்றும்பாதுகாப்பு

வணிகரீதியிலான கோழிப்பண்ணைகள் ஆரோக்யம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்ய கீழ்க்கண்டவற்றை பின்பற்ற வேண்டும்.

பூச்சிக்கொல்லிகளை பாதுகாப்புடன் பயன்படுத்துதல்

 • • பூச்சிக்கொல்லிகளை வைக்கும் கலன்களில் எச்சரிக்கும் குறியீடுகள் இடப்பட்டிருக்க வேண்டும்
 • • பூச்சிக்கொல்லிகளை தங்குமிடத்திற்கு அருகாமையில் இல்லாமலும், குழந்தைகள் மற்றும் கால்நடைகளுக்கு எட்டாத வகையிலும் சேமித்து வைக்க வேண்டும்
 • • மழையிலோ, நேரடியாக சூரிய ஒளியிலோ படுமாறு பூச்சிக்கொல்லிகளை வைக்காமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும்
 • • கையுறை, முகக்கவசம், தலைக்கவசம், உடல் மறைப்பு அணிகள், கால்களை முழுதும் மறைக்கும் ஆடை போன்ற பாதுகாப்பு உடைகளை அணிந்து முழு உடலையும் மறைத்த பின்னரே பூச்சிக்கொல்லிகளைக் கையாள வேண்டும்
 • • பூச்சிக்கொல்லி கரைசல், தெளிப்பான், அளவு, எண்ணிக்கை போன்றவை பரிந்துரைக்கப்பட்ட முறைகளில் மட்டுமே செய்யப்பட வேண்டும்

நோய் எதிர்ப்பு மருந்துகளை பொறுப்புடன் பயன்படுத்தல்

 • • விலங்குகளுக்கு மட்டுமன்றி மனிதர்களுக்கும் நோய் எதிர்ப்பு திறனுக்கு இம்மருந்துகளை மருத்துவர்கள் பயன்படுத்துகிறார்கள்
 • • நோய் எதிர்ப்பு மருந்துகளும் பிற மருந்துகளும் மிக புத்திசாலித்தனமாக கோழிகளின் ஆரோக்கியத்திற்காகவும், நோயிலிருந்து பாதுகாக்கவும் பயன்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் தொடர் உற்பத்திக்கு அதுவே சிறந்த வழிமுறை.

Stay updated

Get Our Latest Articles Delivered In your inbox

Reach Us

Please get in touch and we will be happy to help you.

PFRC
S.F.NO 388/3, Ist Floor, Federal (Upstairs),
Chettipalayam Road,
Palladam - 641664,
Tirupur District, Tamilnadu, India.

04255-254877
04255-255371

info@pfrc.in

Leave A Message