தலைவர் அறிக்கை

தலைவர் அறிக்கை

கோழி விவசாயிகள் ஒழுங்குமுறை கவுன்சில் – பி.எஃப்.ஆர்.சி. – யின் இணையத்தளத்திற்கு உங்க்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

 

தலைவர் அறிக்கை

தலைவர்-பி.எஃப்.ஆர்.சி.

கோழி விவசாயிகள் ஒழுங்குமுறை கவுன்சில் – பி.எஃப்.ஆர்.சி. – யின் இணையத்தளத்திற்கு உங்க்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

கோழிப்பண்ணையம், குஞ்சு பொரிப்பு, தொடர்பான நடவடிக்கைகள், வழங்கல் வழிமுறைகள், தீவனத்தயாரிப்பு, கோழி மற்றும் கோழிப்பண்ணைப் பொருட்களுக்கான சில்லறை வாணிப வழிமுறைகள், உணவக சேவை, ஊட்டச்சத்து உணவுப் பரிந்துரைப்பு சேவை, கோழிப்பண்ணை தொடர்பான பிற பிரிவுகளில் இயங்கி வருவோர் என அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஒரு நீண்டகால கனவின் செயல்வடிவாக PFRC உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பு ஒரு சுய ஒழுங்குமுறை அமைப்பாக இருக்கவேண்டி தனது தொலைநோக்கையும், செயல் இலக்குகளையும் உருவாக்கிக் கொண்டுள்ளது. இதன் வழியே தொழிலில் உயர்தர செயல்திறன்களை உருவாக்கவும் இத்தொழிலின்’ ஒட்டுமொத்த நலனை ஊக்குவிப்பதில் முன்னோடி அமைப்பாகவும் PFRC விளங்கும். கோழிப்பண்ணைத் தொழிலின் வெவ்வேறு பிரிவுகளிலும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் செயல்பாட்டாளர்களுக்கு நடுவே முக்கியமானவற்றை உரையாடிக்கொள்ள ஒரு முதன்மையான தொடர்புத் தளமாக இருக்க வேண்டியே இந்த இணையத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

PFRC அமைப்பை குறைந்த கால அவகாசத்தில் உருவாக்கி, வருங்காலத்திற்கான வழிகாட்டியாக வளர்த்தெடுத்தாலும் நாம் எதிர்பாராத கொரோனோ வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இந்தச் சூழல் நமக்கு ஒரு தடையாக மட்டுமன்றி நாம் தொழிலுக்கே ஒரு பின்னடைவையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஆயினும், கோழிப்பண்ணையாளர்களும், கோழி உற்பத்தியாளர்களும் இயல்பான நிலையை எட்ட மிகக் கடினமாக உழைத்து வருகிறார்கள். கொரொனா வைரசை அழிக்கும் வழிமுறைகளைக் கண்டறியும் வரை நீண்ட காலச் செயல்பாடாக நம் உழைப்பு இருக்கப்போகிறது.

இந்திய நாட்டின் ஏற்றுமதியில் முக்கியப் பங்களித்து, நமது நாட்டின் சர்வதேச வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க அளவில் விளைவுகளை ஏற்படுத்தி வரும் நம் தொழில்துறையின் சவால்களைக் குறித்து தேசிய அளவில் அரசாங்கத்தின் அனைத்துப் பிரிவுகளும் அறியும்வகையில் நாம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இருந்தபோதிலும், அரசாங்கம் அறிவித்துள்ள பொருளாதார சலுகையில், இத்தொழிலை மீட்டெடுக்கும் வகையில் ஊக்குவிப்போ, நிவாரணமோ இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது

தலைவர்-பி.எஃப்.ஆர்.சி.

இருப்பினும், இக் கடினமான காலக்கட்டத்தில் அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் தொடர்ந்து பேசி நமது தொழிலின் நியாயமான தேவைகளை நிறைவேற்ற உறுதி கொண்டிருக்கிறோம் என்பதை நம்முடனிருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். இந்திய நாட்டின் மக்கள்தொகை தேவைக்கேற்ப உணவு உற்பத்தியில் ஈடுபடுவதோடு மட்டுமன்றி சர்வதேச சந்தைகளிலும் செயல்பட்டு இந்திய தொழில்துறை விரைவில் மீண்டு நிலைத்து நிற்க முக்கியப் பங்காற்றும் நம் தொழிலுக்கு அரசாங்கத்தின் உதவியை உறுதியாகப் பெறமுடியும்.

PFRC அமைப்பு முறையில் செயல்வடிவம் பெற செய்யப்படும் ஒவ்வொரு கட்ட செயல்பாடுகளையும் உடனுக்குடன் உங்களுக்குத் தெரிவிக்கிறோம். கூடுதலாக, வெவ்வேறு பிரிவுகளிலும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் நுகர்வோர் நலனைப் பாதுகாக்கும் விதத்தில் மேம்பாடு அடைய வழிகாட்டும் விதத்தில் முக்கியமான உறுப்பினர்கள் தத்தம் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுவதையும் உங்கள் முன் வைக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி !

ஆர். லட்சுமணன்
தலைவர்-பி.எஃப்.ஆர்.சி.

எங்களுடன் ஒன்றிணையுங்கள்