பண்ணைக்கோழிகளைப் பராமரித்தல்

பண்ணைக்கோழிகளைப் பராமரித்தல்

 

 

பண்ணைக்கோழிகளைப் பராமரித்தல்
ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை பண்ணையில் வளர்ந்த இளம் கோழியோ, சேவலோ பண்ணைக்கோழி எனப்படுகிறது. இக்கோழிகள் மென்மையான தசைகளோடும், மிக லேசான தோலோடும், நெகிழ்தன்மையுடைய மார்புக் குருத்தெலும்புகளோடும் இருக்கும்.

வசிப்பிடம்
ஒரு கோழிக்கு 930 cm2 அளவு இடவசதி இருக்க வேண்டும். நல்ல காற்றோட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். பொதுவான கோழி பராமரிப்பு என்பது முட்டைக் கோழிகளைக் குறித்த பத்தியில் பேசப்படுகிறது.

தீவனம் அளித்தல்
ஒவ்வொரு கோழிக்கும் முதல் இரு வாரங்களுக்கு 5 செ மீ அளவிலும், மூன்றாம் வாரத்திலிருந்து 10 செ மீ அளவிலும் தீவனத் தட்டில் உணவருந்த இடவசதி இருக்க வேண்டும். தீவனத் தட்டின் உயரத்தை கோழிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப உயர்த்திக் கொண்டேயிருப்பது அவசியம். தீவனத் தட்டில் பாதி அளவிற்கே தீவனம் நிரப்பப்பட வேண்டும். குழாய் வழி தீவனம் அளிக்கும் முறையைப் பின்பற்றினால் 100 கோழிகளுக்கு 12 கிலோ கொள்ளளவில் மூன்று எண்ணிக்கையில் தீவனத் தட்டுகள் இருப்பது சரியான அளவாக இருக்கும் .

பிராய்லர் ரேஷனின் கலவை:

உள்ளடக்கப் பொருட்கள் Percentage inclusion
துவக்க நிலையில் (0-5 வாரங்கள்) முதிர்வு நிலை (6-7 வாரங்கள்)
மக்கா சோளம் 47.00 54.50
அரிசித் தவிடு 8.00 10.00
சோயா பீன் புரதம் 17.50 14.00
கடலைப் புண்ணாக்கு 15.00 11.00
உப்பில்லாத உலர்மீன் 10.00 8.00
அவசியமான தாதுப்பொருட்கள் கலவை 2.00 2.00
உப்பு 0.50 0.50
100.00 100.00

தரமான பெயர் பெற்ற தீவனத் தயாரிப்பாளர்கள் அவ்வப்போது அளிக்கும் உணவு அளவீடுகள் ( துவக்க மற்றும் முதிர்வு நிலைகளுக்கு) இங்கு தரப்படும்.

நீர் அளித்தல்

 • • 0-2 வாரங்கள் வரையிலான 100 கோழிகளுக்கு 2 X 2 லிட்டர் அளவிலான கலனில் நீர் தரவும்
 • • 3 வாரங்கள் முதல் முதிர்வு வரையிலான காலம் வரை 2 x 5 லிட்டர் அளவிலான கலனில் நீர் தரவும்
 • • கோழிகள் அருந்தும் நீர் எப்போதும் தூய்மையாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும்
 • • அடைகாக்கும் பருவத்தில் அதீத எச்சரிக்கையும், கவனமும் இருக்க வேண்டியது அவசியம். •முதல் சில நாட்களில் ஏற்படும் சேதம் 2% அளவைத் தாண்டினால் அடை காப்பு முறையை கவனத்துடன் மறுஆய்வு செய்ய வேண்டும்.
 • கூடவே இறந்த கோழிகளுக்கு உடற்கூராய்வும் செய்யப்பட வேண்டும்.அடை காப்புக் கருவியின் வெப்பநிலையை ஒவ்வொரு வாரமும் 3oC அளவில் குறைக்கவும். அடை காப்புக் கருவி அகற்றப்பட்டதும் 250 கோழிகளுக்கு ஒரு 40- வாட்ஸ் பல்ப் என்ற எண்ணிக்கையில் இரவு முழுவதும் எரிய விட வேண்டும்.
 • • 100 கோழிகளுக்கு ஒரு நாளுக்கு தேவைப்படும் தீவனம் மந்த்ரும் தண்ணீரின் அளவை தோராயமாகக் கணக்கிட கீழ்க்கண்ட சூத்திரம் உதவும்
  • 1. 100 கோழிகளுக்கு தீவன அளவு கணக்கிட (கிலோவில்)= கோழிகளின் வயது நாட்கணக்கில்/4.4
  • 2. 100 கோழிகளுக்கு நீர் அளவு கணக்கிட (லிட்டரில்)= கோழிகளின் வயது நாட்கணக்கில்//2.0
 • • மேற்கண்ட சூத்திரங்களின் அடிப்படையில் உள்ள அளவுகள் இயல்பான சூழலில் பொருந்தும். வருடத்தின் பருவ நிலை மாற்றத்திற்கு ஏற்ப அளவுகளில் 5% – 10% மாற்றங்கள் ஏற்படலாம்

நீர் அளித்தல்

தடுப்பூசி அளித்தல்

வயது நோய் தடுப்பூசி பாதை
0-5 நாட்கள் வெள்ளைக் கழிச்சல்(RD) Lasota or F தடுப்பு மருந்து ஆக்யூலோனாசல்
0-5 நாட்கள் கும்பாரோ நோய்(IBD) IBD லைவ் குடிநீர்
24-28 நாட்கள் கும்பாரோ நோய்(IBD) குடிநீர்

 

தடுப்பூசி

குஞ்சு பொரிப்புக்கான முட்டைகள் உற்பத்தி
குஞ்சு பொரிப்புக்கான முட்டைகளை உருவாக்க நல்ல சேவல்களை பாராமரிக்க வேண்டியது அவசியம். திறந்த வெளி சூழலில் 100 பெட்டைக்கோழிகளுக்கு 15 சேவல்கள் எனில் இங்கு 10 வாரங்களைக் கடந்த 12 சேவல்கள் போதுமானவை. இனச்சேர்க்கையின் போது மிதமான இனப்பெருக்கத்திற்கு 10-15 கோழிகளுக்கு ஒரு சேவல் எனும் விகிதத்திலும், கூடுதலான இனப்பெருக்கத்திற்கு 6-8 கோழிகளுக்கு ஒரு சேவல் எனும் விகிதத்திலும் இணை சேர்க்கலாம். கோழிகளும்,சேவல்களும் இணை சேர்க்கப்பட்ட நாளிலிருந்து பதினைந்து நாட்களில் முட்டைகளை சேகரிக்கத் தொடங்கலாம்

ஒரு நாளில் மூன்று முதல் நான்கு தடவைகளாக முட்டைகளை சேகரிக்கலாம். குளிர்ந்த மற்றும் வெப்பமான நாட்களில் கூடுதல் தடவைகள் சேகரிக்கலாம். சேகரிக்கப்பட்ட முட்டைகளை 70-80% ஈரப்பதத்துடன் இருக்கும் அளவில் 10 முதல் 16 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் பாதுகாத்து வைக்கவேண்டும். குஞ்சு பொரிப்புக்கான முட்டைகளை இயல்பான வடிவம், நிறம், அமைப்பு ஆகியவற்றை கவனமாக பரிசீலித்து தேர்ந்தெடுக்கவும். குஞ்சு பொரிப்புக்கான முட்டைகளை பாதுகாத்து வைக்கும்போதும், போக்குவரத்திற்கு அனுப்பும்போதும் அவற்றின் அகலமான முனை மேல்நோக்கி இருக்குமாறு வைத்து மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். இயலுமானால் முட்டைகளை அடை காக்க ஏற்பாடு செய்யலாம் அல்லது ஒரு வாரத்துக்கு இரு முறை அவற்றை சந்தைப்படுத்தலாம். வழக்கமான பாதுகாப்பு சூழலில் இருந்தாலுமே, எந்நிலையிலும் குஞ்சுபொரிப்புக்கான முட்டைகளை ஒரு வார காலத்துக்கும் அதிகமாக சேகரிப்பில் வைத்திருக்க வேண்டாம்.

குஞ்சு பொரிப்பதற்கான சூழ்நிலைகள்
கோழி முட்டையின் அடை காப்புக் காலம் 21 நாட்கள். சிறப்பான முறையில் குஞ்சுகள் உருவாக குறிப்பிட்ட வெப்பநிலை, காற்றோட்டம், அடிக்கடி முட்டைகள் திருப்பி விடப்படுவது ஆகியவை அவசியம்.

 

குஞ்சு பொரிப்பிற்கான வரையறுக்கப்பட்ட சூழ்நிலைகள்

வெப்பநிலை 1-18 நாட்கள்
19-21 நாட்கள்
37.5 – 37.8oC
36.9 –37.5oC
ஈரப்பதம் 60% – 18 நாட்கள் வரை அதன் பின் 70%
திருப்பி வைத்தல் ஒரு நாளைக்கு 4 முறைகள் வீதம் 18 நாட்களுக்கு
காற்றோட்டம் 1-18 நாட்கள்
19-21 நாட்கள்
ஒரு மணி நேரத்தில் 8 முறை மாற்றம்
ஒரு மணி நேரத்தில் 12 முறை மாற்றம்

 

கரு வளர்ச்சியைக் காண ஒளிப் பரிசோதனை
அடை காக்க வைக்கப்படும் முட்டைகளின் கருவளர்ச்சி சரியாக இருக்கிறதா என அறிய முட்டையை விளக்கொளியின் முன்வைத்துப் பார்த்து உறுதி செய்து கொள்வதை அடை வைத்த 7 ஆம் நாளில் ஒரு முறையும், பிறகு 18-19 ஆம் நாளில் ஒருமுறையும் செய்யலாம். 18 ஆம் நாளுக்குப் பின்னர் முட்டைகளை பொரிப்பகத்திற்கு அனுப்பலாம்.

கரு வளர்ச்சியைக் காண ஒளிப் பரிசோதனை

நோய்க் கட்டுப்பாட்டுக்கான நெறிமுறைகள்
அதிக எண்ணிக்கையிலான கோழிகளை ஒரே வளாகத்திற்குள் அடைத்து வைத்து வளர்ப்பதால் நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவே, நோய்க் கட்டுப்பாட்டிற்கு சரியான விதத்தில் திட்டமிடுவதும், செயல்படுத்துவதும் கோழிப்பண்ணைத் தொழிலின் லாபத்திற்கு மிக அவசியமானது. பின்வரும் பொதுவான நெறிமுறைகளைக் கையாள்வது பயனளிக்கும்.

 • • புதிய கோழிகள் வருவதற்கு குறைந்தபட்சம் இரு வாரங்களுக்கு முன்பாகவே அவற்றின் வசிப்பிடத்தை சுத்தம் செய்திருக்க வேண்டும்
 • • பழைய மிச்சங்கள், சாதனங்களை அகற்றவும். கூரை, சுவர்கள், தரை ஆகியவற்றை சுத்தம் செய்யவும். முழுவதுமாக பெருக்கி, கிருமி நாசினி பயன்படுத்தி கழுவ வேண்டியது அவசியம்.
 • • பயன்படுத்த வேண்டிய பொருட்களை கழுவி, கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்தே பயன்படுத்த வேண்டும்
 • • மின்னிணைப்புகளை சரிபார்த்து ஒளிர் விளக்குகளை சுத்தம் செய்தும், பயனற்ற விளக்குகளை மாற்றியும் அமைக்கவும்
 • • பிற காட்டுப் பறவைகள், எலிகள், நாய்கள் மற்றும் பூனைகள் பண்ணைக்குள் வராதவாறு பார்த்துக் கொள்ளவும்
 • • பண்ணைக்குள் அனாவசியமாக பார்வையாளர்கள் வருகையைத் தவிர்க்கவும்
 • • இறந்த கோழிகளை தாமதமின்றி உடனே புதைக்கவோ, எரிக்கவோ செய்யவும்
 • • தண்ணீர் மற்றும் உணவு அளிப்பான்களை 1% அம்மோனியா கரைசல் சேர்த்து தினமும் சுத்தம் செய்யவும்
 • • பண்ணையின் முகப்பில் இருக்கும் கால் கழுவும் நீரை தினமும் மாற்றவும்
 • • கோழிக் கூண்டின் உள்ளும், பண்ணையைச் சுற்றிலும் சுகாதாரத்தை கண்டிப்புடன் பேணவும்
 • • ஈரமான குப்பைகளை உடனடியாக அகற்றவும்
 • • எப்போதெல்லாம் பண்ணைக்குள் செல்கிறீர்களோ அப்போதெல்லாம் நோய்வாய்பட்ட அறிகுறிகளோடு ஏதாவது கோழி இருக்கிறதா என கண்காணித்துக் கொண்டே இருக்கவும்
 • • அதிகபட்ச உற்பத்திக்குப் பின் அவ்வப்போது கோழிகளுக்கு புழுநீக்கம் செய்துகொண்டே இருக்கவும்
 • • கோழிகளுக்கு ஏதேனும் நோய் அறிகுறிகள் இருந்தால் உடனே பண்ணைக்கோழி நிபுணரிடம் கலந்தாலோசித்து, நோய் பற்றிய துல்லிய விவரங்களை அறிந்து கொண்டு அவர் ஆலோசனைகளை தவறாமல் பின்பற்றவும்

தீவனத்தில் மைக்கோடாக்ஸின் (பூஞ்சை நச்சு)

கோழிகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு விதமான மைக்கோடாக்ஸின்க்கும் ஒவ்வொரு விதமான எதிர்வினைகளைக் காட்டும். கோழித் தீவனத்தில் மைக்கோடாக்ஸின் பூஞ்சை இருப்பது கோழிகளின் வளர்ச்சி, முட்டையிடுவது ஆகியவற்றில் சுணக்கத்தையும், முட்டைகளில் எடைக்குறைவையும் ஏற்படுத்தும். கோழிகளின் முட்டையிடும் திறனிலும், முட்டைகளின் குஞ்சு பொரிப்புத் திறனிலும் இப்பூஞ்சை விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும். கோழிகளைக் காட்டிலும் வாத்துகள் இப்பூஞ்சையால் மோசமான பாதிப்புகளை அடையும்.
தீவனத்திற்கான இடுபொருட்களும், தீவனமும் மைக்கோடாக்ஸின் பூஞ்சை இல்லாமலிருக்க வேண்டும். தீவனத்தில் 11% க்கு அதிகமான ஈரப்பதம் இருப்பது பூஞ்சைத் தொகுப்பு உருவாக வாய்ப்பளிக்கும். ஆகவே தீவனத்தை சேமித்து வைத்திருக்கையில் உருவாகும் பூஞ்சை சேதங்களைத் தடுக்க தீவனத்தை நான்கு உலர வைப்பது, காற்றுபுகா கலன்களில் இட்டு மூடி வைப்பது, சேமிக்கும் இடத்தில் ஈரப்பதம் இல்லாமல் வைப்பது ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும். தீவனத்திற்கான இடுபொருட்களையும், சேர்த்து செய்யப்பட தீவனத்தையும் தொடர்ந்து கண்காணித்து வருவது அவசியம். பூஞ்சைத் தடுப்பான்கள், பூஞ்சைத் தொகுப்பு அழிப்பான்கள்-ஐப் பயன்படுத்துவது தீவனங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.

கிருமிநாசினிகள் – பயன்பாடுகள்

 1. லைசால் – 1-2% கரைசல். பயனுள்ள பொது கிருமிநாசினி, கருவிக்கு ஏற்றது; கோழி உபகரணங்கள், கால் குளியல் போன்றவை;
 2. லைம் (CaOH பொடி): விலை மலிவான இந்த பொது கிருமிநாசினியை சுவர்களுக்கு வெள்ளை அடிக்கையில் பயன்படுத்தலாம். 2-5% அளவிலான கரைசல் நோய்க்கிருமிகளையும், அவை உருவாகும் சூல் தொகுப்புகளையும் அழித்து விடும். தோலில் பட்டால் கடும் அரிப்பையும் இது உருவாக்கும்.
 3. ப்ளீச்சிங் பவுடர் : காலியாக இருக்கும் கோழிக்கூண்டுகளில் தரையை கிருமி நீக்கம் செய்யப் பயன்படுத்தலாம்
 4. ஃபினால் (க்ரெசோல்): குறைந்த நச்சுத்தன்மையுள்ள சற்று விலையுயர்ந்த ஒன்று. பொதுவாக 2-4% கரைசல் கோழிப்பண்ணையையும், பண்ணைக் கருவிகளையும் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும்

கோழிகளுக்கான நோய்த்தடுப்பு – பொது அட்டவணை

நோய்த்தடுப்பு மருந்தின் பெயர் பாதை பறவைகளின் வயது
La Sota அல்லது F vaccine Ranikhet மூக்கு வழி சொட்டு மருந்து 3 முதல் 7 நாட்கள்
Marek’s தடுப்பு மருந்து (பொரிப்பகத்தில்) தசைவழி – ஊசி 1 நாள்
Infectious Bronchitis (முதல் முறை) கண் வழி சொட்டு மருந்து 2 – 3 வாரங்கள்
La Sota Ranikhet குடிநீர் 5 – 6 வாரங்கள்
Fowl Pox (முதல் முறை) இறக்கை தசை வழி – ஊசி 7 – 8 வாரங்கள்
R2B Ranikhet நெஞ்சுப்பகுதியில் / தசைகளில் ஊசி 9 – 10 வாரங்கள்
Infectious Bronchitis கண் வழி சொட்டு மருந்து/குடிநீர் 16 வாரங்கள்
Fowl Pox (இரண்டாம் முறை) தோலுக்கடியில் ஊசி 18 வாரங்கள்
La Sota (தேவைப்பட்டால்) Ranikhet குடிநீர் 20 வாரங்கள்
La Sota (தேவைப்பட்டால்) Ranikhet குடிநீர் 40 வாரங்கள்
IBD (குடல் அழற்சி நோய்):
Mildly invasive vaccine குடிநீர் 0 – 3 நாட்கள்
Intermediately invasive vaccine குடிநீர் 15 வது நாள்
Intermediately invasive vaccine குடிநீர் 28-30 வது நாள்